கல்லூரி மாணவன் கொலை – காதல் விவகாரத்தில் நண்பர்களே கடத்தி கொலை செய்தது அம்பலம்

1493

தஞ்சை அருகே கல்லூரி மாணவன் கடத்தி கொலை செய்யப்பட்டதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.   காதல் விவகாரத்தில் நண்பர்களே மாணவனை கடத்தி கொலை செய்துவிட்டு பணம் கேட்டு மிரட்டியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருவிடைமருதூர் அருகே ஆவணியாபுரத்தை சேர்ந்த சாகுல் அமீது என்பவரின் மகன் மும்தசர் என்ற மாணவன் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தனது நண்பரின் பிறந்த நாள் விழாவிற்கு செல்வதாக தனது தாயரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மாணவனின் தாயாருக்கு வந்த அழைப்பில் பேசிய நபர்கள், மாணவனை கடத்தி வைத்துள்ளதாகவும், 5 லட்சம் பணம் கொண்டுவர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

மாணவன் மும்தசர் போனில் இருந்து வந்த அழைப்பு திருபுவனம் பகுதியில் இருந்து வந்ததை அறிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே நேற்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றில் மாணவன் மும்தசர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். முன்தசரின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் அடிப்படையில் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது காதல் விவகாரத்தில் முன்தசரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். முன்தசரின் நண்பர்களான நியாஸ் அகமது, முகம்மது ஜலீல், சலீம் ஆகிய 3 பேரும் ஒரு பெண்ணை காதலித்த நிலையில், அந்த பெண் முன்தசரை காதலித்ததாகவும், இதனால் ஆத்திரரத்தில் மூவரும் திட்டமிட்டு முன்தசரை கொலை செய்துவிட்டு 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கொலையாளிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of