கைபேசி வாங்கி தராததால் தாற்கொலை செய்த மாணவன்!

433

சுசீந்திரத்தை அடுத்த வண்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 18). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ள நிலையில் அஜய் தனது பெற்றோரிடம் புதிய செல்போன் ஒன்று வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்கவில்லை. இதில் அஜய் மன வருத்தத்துடன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜய் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். வீடு திரும்பிய பெற்றோர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அஜயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of