போதையில் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்..! – நீதிபதி கொடுத்த “அடடே” தண்டனை..!

351

உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின்படி, விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை மாணவர்கள் தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் கல்லூரிக்கு மதுபோதையில் வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவர்கள் 8 பேரையும் கல்லூரியில் தொடர்ந்து படிக்க அனுமதியளிக்கவில்லை.

இந்நிலையில், கல்வி கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களின் மூன்றாம் ஆண்டு படிப்பை தொடர்வதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதியளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட 8 மாணவர்களும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கல்லூரி மாணவர்கள் 8 பேரும் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-இல் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும்.

இதையடுத்து அங்கு மது ஒழிப்பு குறித்த 16 வாசகங்களை முழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், காமராஜர் நினைவு இல்லத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு தேவையான உதவிகளை அவர்கள் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் மாணவர்கள் 8 பேரையும் விருதுநகர் நகர் போலீஸார் கண்காணிக்க வேண்டும். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டவுடன், அதனை ஆகஸ்ட் 19 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின்படி, விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை மாணவர்கள் 8 பேரும் இன்று தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of