Comali Trailer : “யார ஏமாத்துற.., இது 1996” ரஜினியை மாசாக கலாய்த்த ஜெயம் ரவி..,!

1427

டிக்-டிக்-டிக் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இந்த படத்தில் இவருக்கும் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஹிப்ஹப் தமிழா இசையமைத்துள்ள இந்த படத்தில், யோகி பாபு, ஷாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசர் ஆரம்பம் முதலே படுகாமெடியாக நகர்கிறது. 16 வருடம் கோமாவில் இருந்து விட்டு, இன்றைய உலகை பார்த்து பிரம்மித்து ஜெயம் ரவி செய்யும் சேட்டைகள் டீசரில் காட்சியாக உள்ளது.

இந்த டீசரில் அல்டிமேட்டான விஷயம் என்னவென்றால், டீசரின் இறுதியில் ஜெயம் ரவி ஒரு வசனம் பேசி ரஜினியை கலாய்த்து இருப்பார்.

“இது 2016 ஆம் வருடம், வேண்டும் என்றால் டிவியை பாரு” என ஜெயம் ரவியிடம் கூறுகிறார் யோகி பாபு. செய்தி தொலைக்காட்சியில் ரஜினி அரசியலுக்கு வருவேன் என அறிவிக்கும் காட்சி ஓடுகிறது.

அதை பார்க்கும் ஜெயம் ரவி இது 1996 எனக் கூறி தான் கோமாவில் இருந்ததை நம்ப மறுக்கிறார். இதில் ரஜினி 1996-ஆம் ஆண்டு சொன்னதை தான் தற்போது சொல்லி இருக்கிறார் என்று செமையாக கலாய்த்துள்ளனர்.

Advertisement