காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மரணம்.. – திரையுலகம் அதிர்ச்சி…!

1232

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகரான கிருஷ்ணமூர்த்தி படப்பின்போது திடீரென மரணமடைந்தார்.

தவசி படத்தில் “எக்ஸ்கியூஸ்மி சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்லமுடியுமா?” என்ற வசனம் மூலம் பிரபலமானவர் கிருஷ்ணமூர்த்தி.

திருவண்ணாமலையைச் சேர்ந்த 1983ஆம் ஆண்டு நடிப்பதற்காக சென்னை வந்த அவருக்கு புரொடக்‌ஷன் மேனஜராக வாய்ப்பு கிடைத்தது. பல படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனஜராக பணியாற்றினார்.

அதோடு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தும் வந்தார். தவசி,எல்லாம் அவன் செயல், நான் கடவுள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், குமுளியில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாலை 4.30 மணிக்கு உயிரிழந்தனர்.மறைந்த கிருஷ்ணமூர்த்திக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of