“அவனை விளக்குமாற்றால் அடியுங்கள்.. மோடி அய்யா..” – சூரி வெளியிட்ட வீடியோ

854

கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திரைத்துறையை சேர்ந்தவர்கள் அவர்களது குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காமெடி நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குளியலறையில் தனது மகனை குளிக்க வைக்கும் சூரி, மகனின் சேட்டைகளை தாங்க முடியாமல் ஒரு வழியாக குளிக்க வைக்கிறார்.

இதனையடுத்து பேசும் அவர், மோடி அய்யா, வெளியே போன கொரோன கொன்றுவிடும் என்கிறீர்கள். ஆனால், வீட்டுக்குள் இருந்தால் இந்த பக்கி பசங்க நம்மை கொன்று விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்.

இதையடுத்து தொடர்ந்து பேசும் அவர், மோடி அய்யா அப்படியே அந்த சீன பிரதமருக்கு ஒரு போன் செய்து இவ்வளவு பிரச்னைக்கும் மூலகாரணமாக இருந்த அந்த வவ்வால், பாம்பை சாப்பிட்ட பக்கி பசங்களை விளக்குமாற்றால் அடிக்கச் சொல்லுங்கள்.

அப்போதுதான் புத்தி வரும் என்றும் நகைச்சுவையாக பேசுகிறார். இதுதொடர்பான அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of