“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..?” என்ன செய்யப்போறாரோ..!

1461

பிரபல தொலைக்காட்சி ஒன்றில், லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் பணியாற்றிக்கொண்டிருந்த சந்தானம், சிம்பு நடித்த மன்மதன் திரைப்படத்தின் மூலம் காமெடியனாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு மாஸ் ஹீரோக்களுடன் கமெடியனாக நடித்து, பின் ஹீரோவாக தன்னை உயர்த்திக் கொண்டார். இவர் கமெடியனில் இருந்து ஹீரோவாக மாறினாலும், தொடர்ந்து காமெடி படங்களை மட்டுமே கொடுத்து வந்தார். சமீப காலமாக அவரது படங்கள் எதுவும் வெளியாகமால் இருந்த நிலையில், ஏ 1 ( அக்யூஸ்ட் நம்பர் 1 ) என்ற படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார் சென்னை கமிஷினர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“நடிகர் சந்தானம் நடிப்பில் தயாரிக்கப்பட்ட ஏ1 (அக்யூஸ்ட் நம்பர் ஒன்) திரைப்படத்தின் 2-வது டீசர் வெளியாகி இருக்கிறது.

அதில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி கேலி செய்யப்பட்டுள்ளது. எனவே நடிகர் சந்தானத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

பல பெரிய நடிகர்கள் தொடங்கி சிறிய படங்கள் வரை அனைவரின் படங்கள் மீதும் தடை விதிக்க வேண்டும் என்று எதோ ஒரு கும்பல் புகார் அளித்துக் கொண்டு வருகிறது. தற்போது இந்த நிலைமை சந்தானத்திற்கும் வந்துவிட்டது என்று சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.