திருமணம் முடிந்த கையோடு யோகிபாபுக்கு வந்த ஆப்பு..! கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

720

முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் இல்லாமல் தற்போது திரைப்படங்களே இப்பதில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிறைய திரைப்படங்களில் யோகி பாபு நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவருக்கு பார்கவி என்ற பெண்ணோடு அவரது குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் யோகிபாபு மீது புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள ஒரு படத்தில், அவர் முருகன் வேடத்தில் இருப்பது போன்ற காட்சி போஸ்டராக வெளியாகி உள்ளது.

அதில் முருகனின் வாகனமான மயிலுக்குப்பதில், கிளியை போட்டு கிண்டல் செய்துள்ளனர்.

இந்த செயல் மத உணர்வை புண்படுத்தும் விதமாக உள்ளதால், நடிகர் யோகிபாபு மீதும், அந்த திரைப்படத்தின் இயக்குநர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of