“வாய வச்சிட்டு சும்மா இருந்தா தான..” ஸ்ரீரெட்டிக்கு வந்த புதிய ஆப்பு..!

422

வாயில் தான் சனி.. மாறுவாரா இனி.. என்று ரைமிங்காக கேட்கும் அளவிற்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ-ரெட்டி. இவர் பல்வேறு நடிகர்கள் வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை படுக்கையில் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றி விட்டார்கள் என்று பகீர் கிளப்பினார்.

இதற்காக அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார் இந்த ஸ்ரீ-ரெட்டி. இவ்வாறு பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்திய ஸ்ரீ-ரெட்டி புயல், ராகவா லாரன்ஸ் வாய்ப்பு தருகிறேன் என்று கூறியதும் அமைதியாக கரையை கடந்தது.

இருப்பினும் பல்வேறு நடிகர்களையும், நடிகைகளையும் வம்பிழுத்து வரும் நடிகை ஸ்ரீ-ரெட்டி, தற்போது புதிய ஆப்பு ஒன்றை தனக்குத்தானே வைத்துக்கொண்டுள்ளார். இவர் சமூக வலைதளத்தில், நடன இயக்குனர் ராகேஷ் மற்றும் துணை நடிகை கராத்தே கல்யாணி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதனால் கடுப்பாகிய கராத்தே கல்யாணியும், ராகேசும் சைபர் கிரைம் போலீசில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், ஸ்ரீ-ரெட்டி கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of