“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..! ஒத்துக்கொண்ட பிரபல தமிழ் வில்லன் நடிகர்..?

752

தனுஷின் மரியான், சிம்புவின் சிலம்பாட்டம், விஷாலின் திமிரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் வில்லன் நடிகர் விநாயகன். இவர் தற்போது கேரளாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் மாடல் அழகியும், சமூக ஆர்வலருமான மிருதுளா தேவி என்பவர், விநாயகன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீ டூ புகாரை தெரிவித்திருந்;தார். இதனைத்தொடர்ந்து கல்பட்டா பகுதி காவல்நிலையத்திலும் மிருதுளா தேவி புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விநாயகத்தை கைது செய்தனர். சில நாட்கள் கழித்து ஜாமீனில் விநாயகன் வெளியே வந்தார். இந்த நிலையில் விநாயகன் மீது கல்பட்டா நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில் குற்றத்தை விநாயகன் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் அடுத்த மாதம் நடக்கிறது. ஏற்கனவே நிறம் மற்றும் சாதி தாக்குதலுக்கு ஆளான இவர், பாஜவுக்கு எதிரான கருத்துகளை பேசியும் சர்ச்சைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of