ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, பசுமை தீர்பாய்யத்தில் மனு அளிக்க உள்ளது: கமல்ஹாசன்

861

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மூட வலியுறுத்தி, பசுமை தீர்பாய்யத்தில் மனு அளிக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மூட வலியுறுத்தி பசுமை தீர்பாய்யத்தில் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்திற்கு இன்னும் பெரிய ஆலைகள் வர வேண்டும் என்ற அவர், அவை மக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்த கமல்ஹாசன், ஊழலை ஒழிப்பேன் என்ற நல்ல கருத்தை விஜய் கூறியுள்ளார் என்று பாராட்டு தெரிவித்தார்.

Advertisement