முழுமையான அளவில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

259

சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வில், மனித எலும்புகூடு முழுமையான அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 6சஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. வைரஸ் பரவல் காரணமாக இரு மாதங்கள் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணி, கடந்த மே 23ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.

இதில் கொந்தகையில் நான்கு குழந்தைகளின் எலும்பு கூடுகள் கடந்த ஜுலை மாதம் கண்டெடுக்கப்பட்டது. இந்த எலும்பு கூடுகளின் மாதிரிகள், ஆய்விற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதால், எலும்புகளின் ஆய்வு பணி தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் கொந்தகையில் நேற்று, ஐந்து அடி நீளமுள்ள எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எலும்பு கூடு சிதிலமடையாமல் முழுமையாக உள்ளதால், முகத்தின் தாடை எலும்பு, பல், கால் மூட்டு உள்ளிட்டவற்றில் உள்ள செல்கள் மூலம் டி.என்.ஏ பரிசோதனை செய்து, எலும்பு கூட்டின் காலத்தை கண்டறிய முடியும் என்று, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement