உள்ளாட்சி தேர்தல் நடத்த 3 மாதம் அவகாசம் வேண்டும்.., தமிழக அரசு

207

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்றும், எனவே சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு 10 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றிய ஆணையை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறு வரையறை நடந்து வருவதாகவும், இந்த பணி நிறைவு பெற்று தொகுதி மறுவரையறை தொடர்பான அறிவிப்பாணையை அரசு இதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு தேர்தல் கமிஷன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of