பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

482

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சுட்டுரையில் கூறியிருப்பது: மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்குத் நெஞ்சார்ந்த நன்றி. மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்.

தமிழகத்தின் உரிமைகளைக் காக்க என்றும் குரல் கொடுப்போம். பிரதமருக்கு வாழ்த்து: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.

ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் முற்போக்கான ஆட்சியை அவர் நடத்துவார் என்று நம்புகிறோம். வரும் 5 ஆண்டுகளில் கடினமான உழைத்து, தமிழக மக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of