சிறப்பு ஒலிம்பிக் போட்டி: 368 பதக்கங்களை தன்வசமாக்கிய இந்தியா

298

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக்போட்டி நடைபெற்றது. இதில் மனநலம் மற்றும் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விளையாட்டு போட்டியில் உலகம் முழுவதுமிலிருந்து 7 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பில் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய விளையாட்டு வீரர்கள் 85 தங்கம் உட்பட 368 பதக்கங்கள் வென்றனர்.

இவர்களை டுவிட்டரில் பாராட்டிய பிரதமர் மோடி இன்று இந்தியாவிற்கு பெருமையான நாள் . அவர்களின் பலமும் சாதனைகளும் மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of