தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் கூட்டணி

825

தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

தெலங்கானா மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, கடந்த 6ஆம் தேதி அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல்களுடன், தெலங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இதுதொடர்பாக மூன்று கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Advertisement