டைமிங்கில் அசத்திய சிறுமி! பரிசு வழங்கிய காங்கிரஸ் வேட்பாளர்!

895

கரூர் தொகுதியில் காங்கிரசின் ஜோதிமணி போட்டியிடுகிறார். ஏற்கனவே 2 முறை மோதிய அதே தம்பிதுரையுடன்தான் இந்த முறையும் மோதுகிறார். இப்போது, தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் உள்ளார் ஜோதிமணி.

கணக்குவேலம்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது,

“கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் பெயர் தெரியுமா?”

என பொதுமக்களிடம் கேள்வி கேட்டார்.

அதற்கு பொதுமக்கள் சிறிது நேரம் அமைதியாக இருக்க, “இந்த தொகுதி எம்பி பெயர் தம்பிதுரை. இங்கதான் 10 வருஷமாக எம்பியாக இருக்கிறார். அவர் ஓட்டு கேட்க வந்தால், 10 வருஷமாக எங்க போனீங்க? என்று கேளுங்கள்”

என்றார்.

இதை சொன்னதும் கூட்டத்தில் ஒரு குழந்தை பலமாக கை தட்டியது. கை தட்டியதும் ஜோதிமணி அந்த குழந்தையை பார்த்தார். பிறகு சிரித்துவிட்டு திரும்பவும் தொடந்தார்

“இப்படிதான் 10 வருஷமா இந்த தொகுதியில் அவர் எம்பியாக இருக்கிறார். ஆனால் நானோ எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவள். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தேன். என்னை வேட்பாளராக கட்சி அறிவித்திருப்பதே ஏழை மக்களின் நிலையை உணர்ந்த ஒரு எம்பி கரூரில் வேண்டும் என்பதற்காகத்தான்”

என்றார்.

இதை சொல்லி முடித்ததும் திரும்பவும் அதே குழந்தை சத்தமாக கை தட்டி ஆரவாரம் செய்தது. இதை அங்கிருந்த திமுக காங்கிரஸ் தொண்டர்கள் கண்டு உற்சாகம் அடைந்தனர். இதனால் அந்த சிறுமியை ஜோதிமணிக்கு பிடித்து போக, பழத்தை பரிசாக அளித்துவிட்டு கண்ணத்தை தட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.

Advertisement