தேசியவாதம் பேசி நாட்டை இரண்டாக்கும் மோடி.., அசோக் கெலாட் காட்டம்

364

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் மூத்த தலைவரான அசோக் கெலாட் முதல்-மந்திரியாக உள்ளார். அவர் ஜோத்பூரில் தனது குடும்பத்தினருடன் வாக்கு பதிவு செய்தார்.

ஓட்டு போட்ட பிறகு அசோக் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

“தேசியவாதம் குறித்து பேசி பிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்துகிறார். இதனால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு சர்வாதிகாரியும் தேசியவாதம் குறித்து முதலில் பேசி மக்களை கவர்ந்ததாக வரலாறு சொல்கிறது. இதை தான் மோடி தற்போது செய்கிறார். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

மோடி சர்வாதிகாரியாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. அது நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சி குறித்து பேசாமல் தேசிய வாதம் மற்றும் தேசப்பற்று குறித்து மோடி பேசுகிறார். அப்படியென்றால் அவரை தவிர மற்றவர்களுக்கு தேசப்பற்று கிடையாதா?” என தெரிவித்தார்.

மேலும், அசோக் கெலாட் மகன் வைபவ் ஜோத்பூர் எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of