“அடுத்த பட்ஜெட் கூட்டத்துக்கு கூப்டுங்க” நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத நிதியமைச்சர்..

513

நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் நடைபெற்ற பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளாததற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக விம்ரசித்துள்ளது.

டெல்லியில் மத்திய அரசின் கொள்கைக் குழுவான ‘நிதி ஆயோக்’ அமைப்பின் சாா்பில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கவில்லை. அந்த நேரத்தில், அவா் பாஜக தலைமையகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் மத்திய பட்ஜெட் தொடா்பாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தாா்.

நிதி ஆயோக் கூட்டத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்காததை காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. அக்கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘ஒரு பெண் செய்ய வேண்டிய பணியைச் செய்வதற்கு எத்தனை ஆண்கள்?

அடுத்த பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்துக்கு நிதியமைச்சருக்கு அழைப்பு விடுக்குமாறு யோசனை தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of