லாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..!

922

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேற்று 11 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சூழலில் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பதிவில் மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசு நாள்தோறும் வெளியிடும் வெற்று அறிக்கைகள், அட்டூழியங்களை நிறுத்துங்கள் என்றும் விவசாயத்திற்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற்றாலே போதுமானது என மத்திய அரசை சாடியுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், இந்திய விவசாயிகள் விழித்து கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் எப்போது விழிப்பீர்கள் என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு வழங்கிய லாலிபாப் மிட்டாயை விவசாயிகள் புறக்கணித்ததன் மூலம் விழித்து கொண்டோம் என்பதை வெளிப்படுத்திவிட்டார்கள் என தெரிவித்தார்.

Advertisement