தேசியம் பற்றி நான் பேசினால் குற்றமா? மோடி கேள்வி

522

கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றினார். இதில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் கூறுகையில், 

வணக்கம், சகோதர சகோதரிகளே, தமிழக மக்களுக்கு வணக்கம், மருதமலை முருகனுக்கு அரோகரா என தமிழில் உரையை ஆரம்பித்தார்.

உலகளவில் தமிழர் பண்பாடு சிறப்புடையது. தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சி தலைவர் எம் ஜி ஆர் , ஜெயலலிதா அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன்.

எம்.ஜி.ஆர், ஜெ.வின் எண்ணங்கள் நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன். கல்வி வளமும் செல்வ வளமும் மிகுந்த கோவை நகரத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது; உலகளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது. நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக இருக்கிறோம். நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக தரப்படும். பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.

நான் தேசியம் பற்றி பேசுவது குற்றமா? நான் தேசியம் குறித்து பேசினால் எதிர்க்கட்சிகள் என்னை கேள்வி கேட்பது சரியா?

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of