ஐ.நா.வின் அறிவிப்பை காங்கிரஸ் கொண்டாட மறுக்கிறது ? – அருண் ஜெட்லி

320

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ஐ.நா.வின் அறிவிப்பில் புல்வாமா தாக்குதல், காஷ்மீர் தாக்குதல்களில் மசூத் அசாரின் பங்கு பற்றிய தகவல்கள் இல்லாதது வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் கூறுவதை ஏற்க முடியாது.

ஐ.நா.வின் அறிவிப்பு மசூத் அசாரின் வாழ்க்கை குறிப்பு அல்ல. அவரது ஒவ்வொரு நடவடிக்கைகள் பற்றியும் விவரமாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

இதில் முக்கியமான விஷயம் அசார் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது மட்டுமே. இதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியது அவரும், அவரது நாடும் தான்.

ஆனால் இதில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், தான் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டால் அரசியல் ரீதியான விலையை (தோல்வி) கொடுக்க வேண்டியது வருமோ என்று எதிர்க்கட்சி (காங்கிரஸ்) கருதுகிறது. அதனால் தான் இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என கேட்கிறது என்று அவர் கூறியுள்ளார்.