போட்டியிட்டும் வாக்களிக்காத முன்னால் முதல்வர்.., இவர் சொன்ன பதில்?

409

நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.காங்கிரஸ் தரப்பில் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் வாக்களிக்கவில்லை. அவருடைய வாக்கு ராஜ்கார்க் மாவட்டத்தில் உள்ளது. ஆனால் போபால் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று 6-வது கட்டமாக அங்கு தேர்தல் நடைபெற்றது.

திக்விஜய் சிங் ராஜ்கார்க் செல்லவில்லை, வாக்கும் அளிக்கவில்லை. இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள திக்விஜய் சிங், அடுத்தமுறை கண்டிப்பாக வாக்களிப்பேன் எனக் கூறியுள்ளார். தன்னால் அங்கு செல்ல முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of