“ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது சாத்தியமே இல்லை” – கே.எஸ்.அழகிரி

239

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போகிறேன் என்று கூறியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மேலும், அவர் பாஜகவின் மறைமுக ஆதரவாளர் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இருப்பினும், நடிகர் ரஜினிகாந்த் அரசியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பெரியாரை விமர்சித்த நடிகர் ரஜினிகாந்த் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் ஆசிரியர் சோ பா.ஜனதாவை விமர்சித்ததை ஏன் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில், நழுவுற மீன் என்று கூறிய அவர், ரஜினிகாந்த் பா.ஜனதா கட்சியின் வலையில் சிக்க மாட்டார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி, ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது சாத்தியமே இல்லை என்று தெரிவித்தார்.

Advertisement