“என் மகன் சட்டையை கிழித்து தூக்கி எறியுங்கள்!” காங்கிரஸ் தலைவர் பிரச்சாரம்

505

மத்தியபிரதேச மாநில முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் ஆவார். இவர் சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தனது மகனுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர்,

“பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்நாத், 9 முறை இந்த தொகுதியில் நான் எம்.பி-யாக வெற்றி பெற்று சேவை செய்துள்ளேன்.

இந்த முறை சிந்த்வாரா தொகுதி மக்களாகிய உங்களுக்கு சேவை செய்ய என் மகன் நகுல்நாத்தை அரசியலில் களமிறக்கியுள்ளளேன்.

மக்களாகிய உங்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை, நான் நகுல்நாத்துக்கு வழங்கியுள்ளேன்.

ஒருவேளை அவர் தனது பணியை சரியாக செய்யாது போனால், அவரது சட்டையை கிழித்து பணிபுரிய சொல்லுங்கள் அல்லது தூக்கி எறியுங்கள்”

என்றார்.

மத்தியபிரதேச மாநில அரசை தொடர்ந்து நடத்த சட்டமன்ற உறுப்பினர் பதவி வேண்டும் என்பதற்காக, தற்போது முதல்வராக உள்ள கமல்நாத்தும் சிந்த்வாரா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

எனவே தான் சிந்த்வாரா மக்களவை தொகுதியில் தனது மகனை களமிறக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of