இந்த பிரபல விளையாட்டு அணிக்கு ராகுல் ரசிகரா? ஓபன் டாக்!

463

ரியல் மாட்ரிட் என்பது புகழ்பெற்ற கால்பந்து அணியாகும். கடந்த 1902 ஆம் ஆண்டில் இருந்து ஸ்பெயினில் இயங்கி வரும் இந்த அணிக்கு உலகெங்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்த அணியின் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த அணிக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளார். அந்த அணிக்கு சமமாக புகழ்பெற்ற மற்றொரு அணி பார்சிலோனா அணி ஆகும்.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் குடியரசு குறித்த விவாதம் ஒன்றில் மாணவர்களுடன் கலந்துக் கொண்டார். அப்போது அவரிடம் உடனடி பதில் அளிக்கும் கேள்விகள் எனப்படும் கேள்விகளை மாணவர்கள் கேட்டனர்.

அந்த வரிசையில் அவரிடம் அவர் பார்சிலோனா கால்பந்து அணி ரசிகரா அல்லது ரியல் மாட்ரிட் அணி ரசிகரா என கேட்கப்பட்டது.

அதற்கு ராகுல் காந்தி, ‘பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளில் நான் ரியல் மாட்ரிட் அணி ரசிகன்.

அந்த அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெறும் வரை நான் அந்த அணியின் ரசிகனாகவே இருப்பேன்’ என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த உடனடி பதில் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of