காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கோமாளி – சந்திரசேகர் ராவ்

875

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கோமாளி என்று, சந்திரசேகர் ராவ் விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா சட்டசபை கலைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அடுத்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டிப்பிடித்ததையும், அதன் பின்னர் கண்ணடித்ததையும் ஒட்டுமொத்த நாடும் பார்த்து சிரித்ததாக கூறினார்.

எனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கோமாளி என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். தனது அரசுக்கு எதிராக ஆதாரமற்ற, குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் காங்கிரஸ் கட்சிதான் தெலங்கானாவின் முதல் மற்றும் மிகப்பெரிய எதிரி என்று தெரிவித்தார்.

இதனிடையே தெலங்கானா சட்டசபை கலைக்கப்பட்டாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement