ரபேல் போர் விமானம் ஊழல் காங்கிரஸ் பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம்

844

ரபேல் போர் விமானம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Vovt
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து ‘ரபேல் போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமான விவகாரத்தில், காங்கிரசின் அடிப்படையற்ற, பொய் பிரசாரம் தொடர்ந்து வருவதாகவும், இதை எதிர்கொள்வதை தவிர, வேறு வழி இல்லை என்றார். இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்க, நாடு முழுவதும் சுற்றி வந்து உண்மையை மக்களுக்கு தெரியவைப்போம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Advertisement