பா.ஜ.க.வுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும் – சந்திரபாபு நாயுடு

634

ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னையில் நேற்று சந்தித்து பேசினார். இதன் பின்னர் ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, ஜனநாயகத்தை பாதுகாக்க ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டு சென்னை வந்ததாக தெரிவித்தார். இந்தியாவில் தற்போது ஜனநாயகம் இல்லை என்றும் சி.பி.ஐ, ஆர்.பி.ஐ போன்ற அமைப்புகள் மோசமான நிலையில் இருப்பதாக கூறினார். நாட்டை காப்பாற்ற பா.ஜ.க.வுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்தார்.

chandrababu naidu mkstalin

மேலும், மோடியின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். பா.ஜ.க-வை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளதாகவும், அவரது முயற்சிக்கு தி.மு.க. துணை நிற்கும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார். சுதந்திரமான அமைப்புகளை மிரட்டி வரும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement