காங்கிரஸ் கொண்டு வந்த ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாஜக – மணிஷ் திவாரி

596

இந்திய விமானப்படையில் ரபேல் விமானம் சேர்க்க தாமதம் ஆனதற்கு காரணமே பாஜக தான் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தனக்கு தானே கேள்வி எழுப்பி கொள்ள வேண்டும் என்று விமானத் தாக்குதல் குறித்து தாங்கள் ஆதாரங்களை கேட்கவில்லை எனவும் கூறினார்.

ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால், பாகிஸ்தான் மீதான தாக்குதல் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று பிரதமர் மோடி பேசியதை சுட்டிக்காட்டிய மணிஷ் திவாரி, ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால், என்ன மாதிரியான விளைவுகள் நடந்திருக்கும் என்பதை விளக்க வேண்டும் என்று கூறினார்.

இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானத்தை சேர்ப்பதில் தாமதம் ஏற்பட முக்கிய காரணம் மோடி தான் என்றும், ஏனென்றால் முந்தையை காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை அவர் தான் ரத்து செய்தார் எனவும் மணிஷ் திவாரி பதிலடி கொடுத்தார்.

Advertisement