பாஜக -வில் இணைந்த காங்கிரஸ் ?

355

தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், உள்கட்சியில் சீட் கிடைக்காத தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் சிலர் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர். தற்போது அவ்வகையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள “கட்டக்” சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான பிரகாஷ் சந்திரா பெஹேரா நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். டெல்லியில் இன்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று அவர் பாஜகவில் இணைந்தார்.

’சுமார் 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்காக நான் பணியாற்றி வந்துள்ளேன். ஆனால், அக்கட்சியின் மாநில தலைமை எனக்குரிய முக்கியத்துவத்தை தரவில்லை.

சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பிறகு எனது தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடியின் தலைமையின் மீது எனக்கும் நம்பிக்கை வந்துள்ளது. அதனால் நான் பாஜகவில் இணைந்து விட்டேன்’ என இன்று செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த பிரகாஷ் சந்திரா பெஹேரா தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of