காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் பாஜகவில் இணைய வாய்ப்பு

260

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர், டெல்லி சென்றுள்ளதால், அவர்கள் இருவரும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் கோவா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவாவில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் உள்ளார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனோகர் பாரிக்கர், தற்போது சில வாரங்களாக ஓய்வில் இருக்கிறார்.

இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தங்களிடம் போதிய எண்ணிக்கை உள்ளதாக கோவா ஆளுநரிடம் மனு அளித்ததோடு, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோரியது. தொடர்ந்து, கோவா விவகாரத்தில் தலையிட்டு ஆளுநர் மிர்துலா சின்காவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வலியுறுத்த வேண்டும் என கோரி, குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்தை சந்தித்து காங்கிரஸ் பிரதிநிதிகள் மனு அளித்தனர்.

இந்நிலையில், தயானந்த் சோப்தே, சுபாஷ் ஷிரோத்கர் ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் கோவா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.