முன்னிலை வகித்த 1 இடத்தையும் இழந்த காங்கிரஸ்.. – தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கிறதா ஆம் ஆத்மி?

621

டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எடுத்த எடுப்பிலேயே ஆம் ஆத்மி கட்சி எதிர்பாராத அளவிற்கு முன்னிலை வகித்து வருகிறது. ஒருபுறம் 15 வருடங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் பூஜ்ஜியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதற்கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பம் முதலே வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்தது. இதனையடுத்து முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்த வாக்கு எண்ணிக்கையிலும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அடுத்த கட்டமாக பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பல தொகுதியில் சொற்ப வாக்குகளில் பாஜக,ஆம் ஆத்மி கட்சியிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  ஆம் ஆத்மி கட்சி கடந்த முறை 70 க்கு 67 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

ஆனால் இம்முறை பாஜக-வின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. 16 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி 53 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த முறை இருந்த ஆம் ஆத்மி அலை தற்பொழுது சற்று குறைந்திருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. ஆட்சியை தக்க வைப்பதறகான 36 இடங்களை கடந்தாலும் ஆம் ஆத்மியின் செல்வாக்கு ஒரு சில இடங்களில் இழந்திருப்பதாக முன்னிலை நிலவரங்கள் உணர்த்துகின்றனர்.

இந்த நிலையில், ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்த ஒரு இடத்தையும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் அந்த ஒரு இடத்தையும் காங்கிரஸ் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரலாறு காணாத அளவிற்கு காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருவது காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த அடியாக கருதப்படுகிறது. மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில் காங்கிரஸ், பாஜக-வை விட ஆம் ஆத்மி கட்சி பெஸ்ட் என டெல்லி மக்கள் நினைக்கிறார்கள் என்பதையே இந்த தேர்தல் உணர்த்துகிறது.

Advertisement