இலங்கையில் தமிழர்கள் உயிரிழப்புக்கு காங்கிரஸ் கட்சி காரணமல்ல – நாராயணசாமி

757

இலங்கையில் தமிழர்கள் உயிரிழப்புக்கு காங்கிரஸ் கட்சி காரணமல்ல என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

உலக திருக்குறள் பேரவை சார்பில் கடலூரில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்கள் செய்து வரும் நிலையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் இருப்பதாகவும், புதுச்சேரி அரசுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே துணை நிலை ஆளுநர் இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, நமது நாட்டின் பொருளாதாரம் தற்போது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.

இலங்கையில் தமிழர்கள் உயிரிழப்புக்கு காங்கிரஸ் காரணமல்ல என்று தெரிவித்த அவர், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் தங்களுக்கு வருத்தம் இருந்தது என்றும் ஆனால், இந்த விஷயத்தில் ராகுல்காந்தி தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டதாக கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of