பிரச்சார பொதுக்கூட்டத்தில் பத்திரிக்கையாளரை தாக்கிய காங்கிரஸ் கட்சியினர் – வீடியோ உள்ளே..

405

விருதுநகரில் காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் காலியாக இருந்த நாற்காலிகளை படமெடுத்த பத்திரிகையாளர் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் ஆட்கள் இல்லாததால் ஏராளமான நாற்காலிகள் காலியாக இருந்தன.

இதனை புகைப்பட பத்திரிகையாளர் படம் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து சக பத்திரிகையாளர்கள் காங்கிரசாரை தடுத்து நிறுத்தி தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளரை காப்பாற்றினர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of