காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது – ராகுல் காந்தி

1020

காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா, கட்சிகளாலும், தலைவர்களாலும் ஆளப்படவில்லை என்றும், விவசாயிகள் மற்றும் இளைஞர்களால் தான் ஆட்சி செய்யப்படுவதாக தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி அதனை மறந்து நாட்டை ஆள்கிறோம் என்ற கர்வத்தில் இருப்பதாக கூறினார். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது என்று தெரிவித்தார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் ஜி.எஸ்.டி. ஒரே வரியாக மாற்றப்படும் என உறுதி அளித்தார்.
முன்னதாக ரபேல் விமான ஒப்பந்தங்களை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளை பா.ஜ.க அரசு தொடங்கி விட்டதாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்காக தான் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement