ரபேல் ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கலை கழற்றிவிட்டது காங்கிரஸ் தான்

783

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கலை கழற்றிவிட்டது காங்கிரஸ் அரசுதான் என, நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே ரபேல் விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும் அனைத்து பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகாமல் இருந்தது.

சுமார் 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு பாஜக ஆட்சியில் கையெழுத்து ஆனது. இந்நிலையில் ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தற்போது இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட குறைவான விலையிலேயே விமானம் வாங்கினோம் என கூறியுள்ளார்.

ரபேல் தயாரிப்பில் இருந்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கலை கைவிட்டது காங்கிரஸ்தான் என்றும், அதன்பின்தான் பாஜக ஆட்சியில் ரபேல் ஒப்பந்தம் தனியாக நடந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விமான படைக்கு உடனடியாக விமானம் வாங்க வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால்தான் ரபேல் ஒப்பந்தம் அவசரமாக நடந்தது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement