கர்நாடகா அரசியல் நாடகம்..! – சபாநாயகரை சந்திக்க வந்த அதிருப்தி MLA-க்கள்..!

306

கர்நாடகத்தில் முதல் அமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ. உள்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 பேரின் ஆதரவு இருந்து வருகிறது. இவர்களில் மந்திரி பதவி கிடைக்காமல் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதை பயன்படுத்தி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க. காய்களை நகர்த்துவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்கவில்லை.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  எம்.எல்.ஏ க்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க, தன்னை உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியாது என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ க்கள் சபாநாயகர் ரமேஷை சந்திக்க மும்பையிலிருந்து வந்தடைந்தனர். தற்பொழுது சபாநாயகரை சந்தித்த பிறகு அவர் பத்திரிகையாளர்களுக்கு 7 மணியளவில் பேட்டி அளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of