மத்திய அரசுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்! -ராகுல்!!

476

தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும், முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

‘தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கும். காஷ்மீர் தாக்குதல் விவகாரம் தொடர்பாக 2 நாட்களுக்கு அரசியல் பேசப் போவதில்லை. நமது பாதுகாப்புக்கு எதிராக நடைபெற்ற இதுபோன்ற தாக்குதல்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், நமது ராணுவ வீரர்களுக்கும், மத்திய அரசுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்’

இவ்வாறு அவர் கூறினார்.