அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு! இன்று காலை தீர்ப்பு!

222

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில் இன்று காலை பத்தரை மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தரப்பு, சபாநாயகர் தரப்பு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தரப்பினர் பரபரப்பாக வாதிட்டனர்.

அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் இரண்டு பக்கமும் நியாயம் உள்ளதாக குறிப்பிட்டனர். எனவே இரண்டு தரப்புக்கு பாதகமில்லாத உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை பத்தரை மணிக்கு வழங்கப்பட உள்ளது.