குறைந்து காணப்பட்ட வைகை அணைக்கு தொடர் நீர்வரத்து அதிகரிப்பு

68

தேனி மாவட்டம், வைகை அணைக்கு தொடர் நீர்வரத்து காரணமாக, அணையின் நீர்மட்டம் தற்போது, 45 புள்ளி ஒன்பது ஆறு அடியாக உள்ளது.

தேனி மாவட்டத்தில், பரவலாக பெய்துவரும் தென்மேற்கு பருவமழை காரணமாக வைகை, கொட்டக்குடி, சுருளி போன்ற ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இது தவிர முல்லைப்பெரியாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த சில வாரங்களுக்கு முன் குறைந்து காணப்பட்ட வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியது. நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது, 45புள்ளி 96 அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியுள்ளதால், பொதுமக்களும்-விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of