குக்கர் சின்னம் கிடையாது – பொதுச்சின்னம் ஒதுக்கலாம் – உச்சநீதிமன்றம் அதிரடி

586

டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியாது எனவும், ஆனால் வேறு ஏதாவது ஒரு சின்னத்தை பொதுசின்னமாக வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் குக்கர் சின்னத்தை ஒதுக்கமுடியாது என தேர்தல் ஆணையம் தட்டிக்கழித்தது.

இந்த நிலையில் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் அமமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமமுக பதிவு செய்யப்படாததால் பொதுச்சின்னம் ஒதுக்கமுடியாது தனித் தனி சின்னம் தான் வழங்க முடியும் என தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.

மேலும் இதுகுறித்து தீர்ப்பளித்த நீதிபதி, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை பதிவு செய்ய தவறிவிட்டீர்கள்.. இதனால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது. தற்போது கட்சியை பதிவு செய்தாலும் சின்னம் வழங்க 30 நாட்கள் ஆகும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது. வேறு சின்னத்தை பொதுச்சின்னமாக வழங்கலாம் என பரிந்துரைத்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of