ஆராச்சியாளர்களுக்காக விண்வெளிக்கு செல்லும் சமையல் சாதனங்கள் | Space Research Centre

321

சர்வதேச விண்வெளி மையம், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து வான்வெளி ஆராச்சிக்காக விண்வெளியில் அமைக்கும் ஒரு இடம். தற்போது அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன. இந்த விண்வெளி நிலையத்தில் வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு அங்கு தங்கி ஆராய்ச்சி செய்யும் வீரர்களுக்கு பிஸ்கெட், சாக்லேட் போன்ற உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான மாவு, ‘மைக்ரோவேவ் அவன்’ ஆகிய சாதனங்கள் அமெரிக்காவின் வெர்ஜீனியா வாலப்ஸ் தீவில் இருந்து சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அந்த விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்று அடைகிறது.