இந்தியா, இலங்கை இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் – மோடி

653

இந்தியா, இலங்கை மக்களுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், சபாநாயகர் கரு ஜெயசூர்யா தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரு நாட்டு மக்களுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவதன் அவசியத்தை பிரதமர் மோடி, இலங்கை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் மட்டுமே நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கிடையே திட்டமிடப்பட்டு வரும் கூட்டு பொருளாதாரத் திட்டங்கள், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement