திருச்சி வங்கிக் கொள்ளை சம்பவத்தன்று ரோந்துப் பணிக்குச் செல்லாத காவலர் இடமாற்றம்!

140

திருச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையை நிகழ்த்தும் முன்பு கொள்ளையர்கள் ஆட்டோ ஒன்றையும், வெல்டிங் நிறுவனத்தில் இருந்த வெல்டிங் இயந்திரத்தையும் திருடியுள்ளனர்.

இதனிடையே சம்பவத்தன்று ரோந்துப் பணிக்குச் செல்லாத காவலர் சகாயராஜை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யும்மாரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.