சென்னை நபருக்கு கொரோனா பாதிப்பு : அவருடன் பழகிய 12 பேரும் கண்காணிப்பு

464

டெல்லியில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் பழகிய 12 பேர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த வட மாநில இளைஞர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் இருந்தவர்களை பரிசோதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா தொற்று ஏற்பட்ட வடமாநில இளைஞருடன் பழகிய 12 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement