மன்கட் முறையில் அவுட்.. அஸ்வினை வைத்து கொரோனா விழிப்புணர்வு.. நெட்டிசன்கள் அலப்பறை..

1765

இதே நாள்.. சென்ற வருடம் ஐ.பி.எல். போட்டியின் போது, அஸ்வின், பட்லரை மன்கவுட் முறையில் அவுட்டாக்கினார். மன்கட் முறை என்பது, பவுலர் பந்து வீசும்போது, நான் ஸ்ட்ரைக் பேட்ஸ்மேன் கிரீஸ்க்கு உள்ளேயே இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால், பவுலர் பந்தை ஸ்டெம்பில் அடித்து அவுட்டாக்கலாம். என்ன தான் இப்படியொரு விதி ஐசிசியில் இருந்தாளும், அவ்வாறு செய்தது, நல்ல பவுலருக்கு அழகல்ல என்று பல்வேறு கிரிக்கெட் ரசிகர்கள் கூறியிருந்தனர். இதற்கு அஸ்வின் விளக்கமும் அளித்திருந்தார்.

இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் ஆன நிலையில், இன்று இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயத்தையும் இணைக்க நினைத்த நெட்டிசன்கள், பல்வேறு மீம்ஸ்களை போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதவாது, அந்த சம்பவத்தின்போது பட்லர் கிரீசை விட்டு வெளியேறியதால் தான் அவுட்டாகினார். எனவே நாமும் கிரீசை விட்டு, அதவாது வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும். வெளியேறினால், கொரோனா தாக்கும் என்பதைப்போன்று மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of