இந்தியாவில் 2 லட்சத்தை கடந்து முன்னேறும் கொரோனா…!

201

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துவிட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந் நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது.

மொத்த பாதிப்பு 2,05,045 ஆக இருக்கிறது. இந்தியாவில் மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் 72,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவை அடுத்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 20,834 பேர், குஜராத்தில் 17,615 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவால் பலியானவர் எண்ணிக்கை 5,780 ஆகும். குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of