உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியது

376

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையால் 3 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 82 ஆயிரம் பேர் வைரஸ் பாகிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 32 ஆயிரத்து 984ஆக அதிகரித்துள்ள நிலையில், இதில் லேசான வைரஸ் தாக்குதலுடன் 10 லட்சத்து  593 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

47 ஆயிரத்து 932 பேர் தீவிர சிகிச்சையில்  உள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 4 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, ஸ்பெயினில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கும், இத்தாலியில் ஒரு லட்சத்து 35 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் உள்ள இத்தாலி, 17 ஆயிரம் உயிரிழப்புகளுடன் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக, ஸ்பெயினில் 14 ஆயிரத்து 45 பேரும், அமெரிக்காவில் 12 ஆயிரம் பேரும் வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of