கொரோனா பாதிப்பு : பாடகி மீது வழக்குப்பதிவு

438

கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், பொது இடங்களுக்குச் சென்ற பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாடகி கனிகா கபூர் லண்டனில் இருந்து கடந்த 15ஆம் தேதி லக்னோ வந்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றாமல் சில நிகழ்ச்சிகளிலும், விருந்துகளிலும் கலந்து கொண்டார்.

இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனிகா கபூர் லக்னோவில் கலந்துகொண்ட விருந்தில் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே சிந்தியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of